May 5, 2012

கல்கியில்.....


எழுத நேரமில்லாமல் பல அலுவலக பிரச்சனைகளுக்கிடைய வாழ்ந்துக்கொண்டு இருக்கும் எனக்கு இன்று மிகவும் சந்தோசம் தந்த ஒரு விசயம் என்னுடைய இன்னொரு சிறுகதை 13.05.2012 தேதியிட்ட இதழில் வெளியாகி இருக்கிறது.



"அண்ணா ப்ளீஸ்"

"காதலித்தல் பாவம் என்றால் கண்களும் பாவம் அன்றோ
கண்களே பாவம் என்றால் பெண்களே பாவம் அன்றோ..."

"ஆமா இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை" என்று கோபமாக ரேடியோவை அணைத்த சீதாவைப் பார்த்தேன். மிகவும் ஆக்ரோஷமாக என்னை முறைத்துக்கொண்டு நின்றாள். அப்படியே அம்மா ஜாடை. அம்மாவை போல அதே தெளிவான முகம். அம்மாவைப் போலவே நடை. எனக்கு அம்மா நினைவு வரும்போது எல்லாம் அவளைப் பார்த்துதான் ஆறுதல் அடைவேன். அப்போதுதான் குளித்து விட்டு வந்திருப்பாள் போல. தலையை சுற்றி டவலால் கட்டியிருந்தாள். முகம் நிறைய மஞ்சள். நெற்றியில் அம்மா வைப்பது போலவே குங்கும பொட்டு. கல்லூரியில் முதல் வகுப்பு படிக்கும் எந்த பெண்ணையும் குங்கும பொட்டு வைத்து பார்த்ததில்லை. ஆனால் சீதா... அப்படியே அம்மாவின் குணம்.
.....................................

- மீதி கதையை இந்த வார கல்கி வாங்கி படித்துவிட்டு சொல்லுங்கள்.

இது கல்கியில் வெளியாகும் என்னுடைய நான்காவது சிறுகதை. என் கதைகளை வெளியிடும் கல்கி நிறுவனத்தாருக்கும், கல்கியின் உதவி ஆசிரியர், எழுத்தாளர் அமிர்தம் சூர்யா அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.