Jan 2, 2012

கல்கியில் என் சிறுகதை


இந்த புத்தாண்டு இப்படி ஒரு சந்தோசத்துடன் ஆரம்பமாகும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. நேற்று வெளிவந்த 08.01.2012 தேதியிட்ட கல்கியில் நான் சமீபத்தில் எழுதிய சிறுகதையான  "அஞ்சனா" என்ற கதை வெளியாகி உள்ளது. போனில் மூலமும், மின்னஞ்சல் மூலமும் வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.





சென்ற மாதத்தில் ஒரு நாள் நண்பர் ஒருவருடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர் சொன்ன ஒரு விசயம் என்னை சிந்திக்க வைத்தது. ஒரே மாதிரி கதைகளை எழுதாமல், பல விசயங்களை கதைகளில் எழுத என்னைத் தூண்டினார். அதனால், ஒரு புதுவிதமான பார்மெட்டில் இந்த கதையினை எழுத ஆரம்பித்தேன்.

கதை சொல்லும் முறை பல இருந்தாலும், எனக்கென்னமோ நானே கதையை சொல்வது போல் எழுதுவது வசதியாக இருக்கிறது. இருந்தாலும் வேறு வகையான கதை சொல்லும் முறையையும் எழுத பழக வேண்டும். அவ்வாறான கதைகள் ஏற்கனவே நிறைய எழுதி இருந்தாலும், இன்னும் வேறு விதமான முயற்சிகளில் எழுத ஆசைப்படுகிறேன்.

நண்பர்கள் அவசியம் கல்கி இதழில் வெளியான எனது கதையை படித்து அதில் உள்ள நிறை குறைகளை சொன்னால், மேலும் என்னை செம்மை படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

எனக்கு எல்லாமே தாமதமாகத்தான் கிடைக்கும். ஆனால் நல்லவையாக அமையும் என்று ஏற்கனவே நிறைய முறை சொல்லி இருக்கிறேன். அது போலத்தான் நேற்றும். கதை வந்துவிட்டது. நண்பர்கள் போன் செய்து வாழ்த்துகிறார்கள். ஆனால் என்னால் கதையை கல்கியில் படிக்க முடியவில்லை. சென்ற முறை கதை வெளியான அன்று கோலாலம்பூரில் மீட்டிங் இருந்ததால் என்னால் உடனே கல்கி வாங்க முடிந்தது.

இந்த முறை எந்த மீட்டிங்கும் அமையவில்லை. அதுவும் இல்லாமல் பொதுவிடுமுறை வேறு. ரொம்பவும் சங்கடமாக உணர்ந்த போது என் பெண் கூறினாள், "ஏன் டாடி ஆன்லைன்ல சப்ஸ்கிரிப்ஷன் பண்ணி படிங்களேன்" அடுத்த விநாடியே ரூபாய் 900 சந்தா கட்டி உறுப்பினராக இணந்து விட்டேன். என் கதையை படித்தும் விட்டேன்.

ஆனாலும், புத்தகத்தை கையில் வாங்கி படிக்கும் அந்த சுகம் கிடைக்கவில்லை. இந்த மாதம் ஊருக்கு போகும் போது வாங்கி படிக்க வேண்டியதுதான்.

என் கதையை வெளியிட்ட கல்கி நிறுவனத்திற்கும், , கல்கியின் உதவி ஆசிரியர் எழுத்தாளர் அமிர்தம் சூர்யா அவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.


6 comments:

அப்பாதுரை said...

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

அமைதிச்சாரல் said...

பத்திரிகையில் படைப்பு வெளியானதுக்கு வாழ்த்துகள்..

sasikala said...

உங்கள் மகிழ்ச்சி எங்களையும் தொற்றிக்கொண்டது

என்றும் இனியவன் said...

வாழ்த்துக்கள்.
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

Rathnavel said...

வாழ்த்துகள்.