May 10, 2010

அன்புள்ள உங்களுக்கு...

அன்புள்ள உங்களுக்கு,

நலமா? நானும் என் குடும்பமும் இங்கு நலம். உங்கள் நலனையும், உங்கள் மனைவி, பிள்ளைகள் நலனையும் அறிய ஆவல்.

உங்களுக்கே தெரியும், நான் பதிவுலகமே கதி என்று கிடப்பவன் என்று. நான் நிறைய எழுதிகிறேனோ இல்லையோ, நிறைய படிக்கிறேன். எனக்கே ஆச்சர்யமாக உள்ளது. பதிவுலகத்துக்கு வருவதற்கு முன்னால் நான் எப்படி என் பொழுதினை போக்கினேன் என்று? நான் உண்மையை சொல்லலாம்தான். சொன்னால், என் மேல் நீங்கள் வைத்து இருக்கும் மதிப்பு குறைந்து போக வாய்ப்பு உண்டு. அந்த அளவிற்கு கணனியை வேறுமாதிரி உபயோகப்படுத்தி இருக்கிறேன். ஆனால், இப்போது அப்படி இல்லை. கணனியை உபயோகமாக பயன்படுத்துகிறேன். இப்போது உலகத்தில் நடக்கும் அனைத்து விசயங்களையும் பதிவுலகின் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்கிறேன்.

அந்த அளவிற்கு என்னை பதிவுலகம் கவர்ந்து விட்டது. தமிழ்மணமும், தமிழிஷும் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை என்றாகிவிட்டது. சன் டிவியில் 'சித்தி' தொடர் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த நேரம் (எனக்கு மிகவும் பிடித்த நான் பார்த்த ஒரே சீரியல் 'சித்தி'). அப்போது நான் அடிக்கடி சொல்வதுண்டு. 'என் வாழ்க்கையில் இருந்து சித்தி தொடரை பிரிக்க முடியாது போல் உள்ளது. என் சுகம் துக்கம் அனைத்தும் சித்தி நாடகம் பகிர்ந்து கொள்கிறது' என்று. எனக்கு ராதிகா மேடத்தை பிடிக்க ஆரம்பித்ததும் அப்போதுதான். அதே போல் பதிவுலகமும் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

இதை ஏன் இப்போது சொல்கிறேன்? ஏனென்றால், நீங்கள் இப்போது முன்பு போல் அதிகம் எழுதுவதில்லை? அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. தினமும் நூற்றுக்கணக்கில் புதிய பதிவர்கள் வருகிறார்கள். சிலர் நிலைத்து நிற்கிறார்கள். சிலர் விரைவில் சென்று விடுகிறார்கள். ஆனால், உங்கள் எழுத்து அப்படி அல்ல. காலத்தால் நிலைத்து நிற்கக் கூடிய எழுத்து உங்களுடையது. தினமும் உங்களை படித்து வந்தேன். இப்போது நீங்கள் அவ்வளவாக எழுதாததால் எனக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. மீண்டும் முன்பு போல் பதிவுலகத்தை விட்டு போய்விடுவேனோ? என்று பயமாக உள்ளது.

அப்படி நான் போனால், பதிவுலகத்துக்கு நஷ்டம் இல்லை. எனக்குத்தான் நஷ்டம். மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறினால் போல் மட்டமான பக்கங்களை படிக்க போய்விடுவேனோ? என பயமாக உள்ளது. நான் எழுதினால் 100 பேர் படிக்கிறார்கள். நீங்கள் எழுதினால் குறைந்தது 1000 பேர் படிக்கிறார்கள். நான் எழுதினால் என் ஓட்டே எனக்கு விழமாட்டேன் என்கிறது. நீங்கள் எழுதினால், எல்லோரும் ஓட்டு போடுகிறார்கள்.

எனக்குத்தெரியும், 100 பேர் படித்தாலும், 1000 பேர் படித்தாலும் அதனால் பைனான்சியலாக ஒரு பயனும் இல்லை என்று. என்ன, ஒரு ஆத்மதிருப்தி உங்களுக்கு கிடைக்கும். அவ்வளவே! ஆனால், எங்களைப்போல வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு உங்கள் எழுத்துக்கள்தான் சந்தோசத்தை கொடுக்கிறது.

எங்கள் சந்தோசத்திற்காகவாவது நீங்கள் தினமும் எழுத வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கடிதத்தை ஒன்றுமே எழுதாமல் இருக்கும் அல்லது தினமும் எழுதாமல் இருக்கும் எனக்குப்பிடித்த என் பதிவுலக நண்பர்களுக்கு போஸ்ட் செய்கிறேன்.

பின் குறிப்பு:

'அன்புள்ள உங்களுக்கு' என்று ஒருவர் அடிக்கடி மெயில் எழுதுவார். அவர் மெயிலிலிருந்து தலைப்பை எடுத்துக்கொண்டேன்.

தினமும் எழுதாத எனக்கு பிடித்த நண்பர்கள் லிஸ்ட் நிறைய இருப்பதால், பெயர்களை தவிர்த்து விட்டேன்.

7 comments:

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... நல்லா இருக்குங்க..

உங்க இடுகைக்கு நான் போட்டுகிறேன் ஒரு ரிப்பீட்டு..

குசும்பன் said...

//அந்த அளவிற்கு கணனியை வேறுமாதிரி உபயோகப்படுத்தி இருக்கிறேன். //

பழய ரெக்காட்ஸை கொஞ்சம் அனுப்பி வைக்கும் படி மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கிறேன்:)))

என். உலகநாதன் said...

//ஆஹா... நல்லா இருக்குங்க..

உங்க இடுகைக்கு நான் போட்டுகிறேன் ஒரு ரிப்பீட்டு..//

வருகைக்கு நன்றி இராகவன் சார்.

என். உலகநாதன் said...

//பழய ரெக்காட்ஸை கொஞ்சம் அனுப்பி வைக்கும் படி மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கிறேன்:)))//

அனுப்பி வைச்சுட்டா போச்சு!

தங்களின் மூன்றாவது வருகைக்கு நன்றி சரவணன்.

MSK said...

உங்கள் பதிவுலக குரு பரிசலுக்கு அனுப்ப மறவாதீர்கள். ரொம்ப நாளா ஆள காணோம்.

நேசமித்ரன் said...

உண்மையான அக்கறையுள்ள இடுகை

மெய்தான் !

:))

padma said...

நல்லா எழுதிருக்கீங்க