Nov 3, 2009

NRE External Savings Account and NRO Account

நான் சொல்லப் போகும் விசயங்கள் நிறைய பேருக்கு தெரிந்து இருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டுமே என்பதற்காக இந்த பதிவு. நான் கடந்த பல வருடங்களாக என்னுடைய சேமிப்பை மலேசியாவிலிருந்து யு எஸ் டாலராக மாற்றி NRE External Savings Account க்கு அனுப்புவேன். பின்பு அதிலிருந்து இந்திய ரூபாயாக மாற்றி NRE பிக்ஸட் டெப்பாஸிட்டில் போட்டு விடுவேன். அப்போதெல்லாம் வட்டி 8% கூட வாங்கி இருக்கிறேன். பிறகு வட்டி சடாரென்று குறைந்து 1.75% என்றெல்லாம் ஆகி, இப்போது 3% வரை தருகிறார்கள். இது மிகவும் குறைவு. நமக்கு குறைவான வட்டி கொடுத்து விட்டு, அவர்கள் மக்களுக்கு லோன் கொடுத்து 8 முதல் 10 % வரை வட்டி வசூலிக்கிறார்கள். வட்டிகள் குறைந்தபோது நான் வேறு வகையில் முதலீடு செய்தேன். ஆனால் மனைகளிலும், வீடுகளிலும் முதலீடு செய்வது சரிதான் என்றாலும், எல்லா சமயங்களிலும் இடங்களே வாங்கிக் கொண்டிருக்க முடியாதல்லவா? எப்போதும் நம்மிடம் பணமாகவும் (Liquid Cash) இருக்க வேண்டும். அதுதான் எதிர்காலத்திற்கு நல்லது.

NRE External Savings Account and FD:

நாம் எந்தவிதமான கரென்ஸியாகவும் இந்த அக்கவுண்ட்டிற்கு அனுப்பலாம். பிறகு இந்திய ரூபாயாக மாற்றிக்கொள்ளலாம். இந்த பணத்திற்கு வருமான வரி இதற்கு கிடையாது. ஆனால் இந்த பணத்தைக் கொண்டு வாங்கும் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வட்டி உண்டு. இந்த சேவிங்ஸ் அக்கவுண்ட்டிலிருந்து இந்திய ரூபாயாக பணம் எடுக்கலாம். ஆனால், இந்திய ரூபாயாக இந்த அக்கவுண்ட்டில் பணம் செலுத்த முடியாது.

இந்த அக்கவுண்ட்டிலிருந்து போடும் NRE பிக்ஸட் டெப்பாஸிட்டுக்கு தற்போதைய வட்டி 3% மட்டுமே. ஆனால், நீங்கள் பிக்ஸட் டெப்பாஸிட்டில் போடாமல் NRE External Savings Account லே வைத்திருந்தால் வட்டி 3.2%. என்ன கொடுமை பாருங்க???

ஒரு வருடத்திற்கு குறைந்த FD இதில் ஓப்பன் செய்ய முடியாது. இதில் உள்ள பெரிய குறைபாடே ஒருவருடத்திற்குள் FDயை க்ளோஸ் செய்து பணமாக்க விரும்பினால், உங்களுக்கு வட்டியே சுத்தமாக கிடைக்காது. முதல் மட்டும்தான் கிடைக்கும்.

NRO Account and FD:

என்னைப் பொறுத்தவரை தற்போதைக்கு இந்த அக்கவுண்ட் ஓரளவு பயனுள்ளதாக உள்ளது. ஆனால் இந்த அக்கவுண்டிற்கு வரும் பணம் NRE External Savings Accountலிருந்து வருவது நல்லது. அதாவது ஏற்கனவே NRE External Savings Accountல் பணம் வைத்திருப்பவர்கள் அதை இந்த அக்கவுண்ட்டிற்கு மாற்றலாம். புதிய சேமிப்பை வெளிநாட்டிலிருந்து NRO Accountக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். இதனுடைய வட்டி 7%. இதன் மூலம் ஒரு Ordinary FD open செய்துக்கொள்ளலாம். அதற்கும் வட்டி 7%. FDயில் உள்ள பணத்திற்கு வருமான வரி செலுத்த தேவையில்லை. ஆனால் அதிலிருந்து வரும் Intrest Income க்கு வருடத்திற்கு வருமானம் 1,50, 000 க்கு மேல் போனால் வருமான வரி TDS செலுத்த வேண்டும். TDS அதாவது Withholding Tax% ஒவ்வொரு நாட்டிற்கும் வேறு படும். அதாவது மலேசியாவிலிருந்து வந்த பணத்தில் போடப்பட்ட பணத்தின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் வருடத்திற்கு ரூபாய் 1,50,000 த்தை தாண்டினால், 10% TDS பிடித்துக்கொண்டு ரூபாய் 1,35,000 தான் தருவார்கள். அதுவே அமெரிக்கா என்றால் 15%.

இது போல் இந்தியா மற்ற நாடுகளுடன் போட்ட அக்ரிமெண்ட் படி TDS விகிதங்கள் மாறுபடும். எல்லா நாட்டிற்கும் என்ன என்ன % என்ற ரிசர்வ் பேங்கின் சர்குலர் என்னிடம் உள்ளது. தேவை பட்டவர்கள் கேட்டால் மெயிலில் அனுப்புகிறேன்.

இந்த NRO Account and FD யின் நன்மைகள் என்னவென்றால்,

01.நியாயமான வட்டி விகிதம்

02. நமக்கு இந்தியாவில் ஏதேனும் வருமானம் வந்தால், உதாரணத்திற்கு வீட்டு வாடகை வந்தால் அதனை இதில் டெப்பாஸிட் செய்து கொள்ளலாம். அதாவது NRE External Savings Accountல் இந்தியாவிலிருந்து இந்திய ரூபாய் டெப்பாஸிட் செய்ய முடியாது. ஆனால் இந்த அக்கவுண்ட்டில் அது முடியும்.

03. ஒரு வருடத்திற்கு முன் FDயை க்ளோஸ் செய்தால், அதற்குறிய வட்டி அதாவது Proportionate Interest கிடைக்கும்.

குறைபாடு என்று பார்த்தால், NRO Accountல் உள்ள பணத்தை மீண்டும் நாம் அனுப்பிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது.

GIFT முறை:

முன்பெல்லாம் என் நண்பர்கள் வருடத்திற்கு ஒரு முறை ஒரு பெரிய தொகையை அவர்களுடைய அம்மாவிற்கு GIFT ஆக அனுப்பிவிடுவார்கள். அவர்கள் அம்மா அதனை சாதாரண FDயாக போட்டு சீனியர் சிட்டிசன் என்ற முறையில் 12% வட்டி வாங்குவார்கள். அவர்களுக்கு வருமான வரியும் கம்மி. ஆனால், இப்போது லேட்டஸ்ட் GIFT TAX ACT என்ன சொல்கிறது என்று தெரியவில்லை. முன்பு Donor based Gift Tax ஆக இருந்தது, பின்பு Donee Based Gift Tax ஆக இருந்தது. இப்போது எப்படி எனத்தெரியவில்லை.

ஆனால், இந்த முறையில் உள்ள சிக்கல் அம்மாவிற்கு ஏதாவது ஆகும் பட்சத்தில், நிறைய சகோதர சகோதரிகள் இருக்கும் பட்டத்தில், இந்த பணத்தை மீண்டும் தனதாக்கிக் கொள்ள அனைவரிடமும் கையெழுத்து வாங்க வேண்டி இருக்கும்.

மீண்டும் சொல்கிறேன், இந்த பதிவு இதைப்பற்றி தெரியாதவர்களுக்கு மட்டுமே. தெரிந்தவர்கள் படிக்க நேர்ந்தால், ஏதேனும் நான் கூறியதில் தவறு இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும். நான் திருத்திவிடுகிறேன்.

6 comments:

sriram said...

தல
மிக உபயோகமான பதிவு, NRO அக்கவுண்ட் பத்தி தெரிஞ்சிக்கிட்டேன், ரொம்ப நன்றி, NRO அக்கவுண்ட் ஓபன் பண்ணிட வேண்டியதுதான்
என்றும அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அமுதா கிருஷ்ணா said...

மிக உபயோகமான பதிவு...

என். உலகநாதன் said...

//தல
மிக உபயோகமான பதிவு, NRO அக்கவுண்ட் பத்தி தெரிஞ்சிக்கிட்டேன், ரொம்ப நன்றி, NRO அக்கவுண்ட் ஓபன் பண்ணிட வேண்டியதுதான்
என்றும அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம்

என். உலகநாதன் said...

//மிக உபயோகமான பதிவு...//

உங்கள் வருகைக்கு நன்றி மேடம்.

nathardeen said...

நான் வெளிநாட்டிற்கு பனி நிமித்தமாக செல்கிறேன் ,நான் என்னுடைய சேமிப்பு கணக்கை எப்படி அங்கிருந்து செயல்படுத்துவது ?????என்னுடைய மெயில் id கு சற்று விளக்கமாக விளக்கத்தை தமிழில் அனுப்பவும் .nathar.deen@yahoo.com

nathardeen said...

நான் வெளிநாட்டிற்கு பனி நிமித்தமாக செல்கிறேன் ,நான் என்னுடைய சேமிப்பு கணக்கை எப்படி அங்கிருந்து செயல்படுத்துவது .என்னுடைய மெயில் id கு சற்று விளக்கமாக விளக்கத்தை தமிழில் அனுப்பவும் .