Sep 14, 2009

நானும் என் தேவதையும்...


இந்த பதிவை எழுத அழைத்த "டாக்டர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி."

எல்லாருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும் அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்.

அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக உங்கள் கண் முன்னாடி ஏஞ்சல் எனும் தேவதை உங்களிடம் பத்து வரங்கள் தருகிறது . நீங்கள் அதனிடம் என்ன வரம் கேட்பீர்கள்?

இதோ நான் தேவதையிடம் கேட்கப் போகும் வரங்கள்:

1. உலகம் முழுவதும் ஒரே நாடாகவும், அனைவரும் ஒரே மதத்தினராகவும் இருக்க வேண்டும்.

2. தீவிரவாதி என்று ஒருவரும் இருக்கக் கூடாது.

3. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வர வேண்டும்.

4. கற்பழிப்பு, பாலியல் வன்முறை மற்றும் பெண்கள் மீதான அடக்குமுறை எதுவும் இருக்கக் கூடாது.

5. விபச்சாரம் என்ற தொழிலே இருக்கக் கூடாது.

6. படித்தவர்கள் மட்டும்தான் அரசியலுக்கு வர வேண்டும்.

7. பெண்களை போகப் பொருளாக பார்க்கும் நிலமை மாற வேண்டும்.

8. விரைவில் 'கோலங்கள்' தொடர் முடிய வேண்டும். இனி இது போன்ற தொடரை யாரையும் எடுக்க அனுமதிக்க கூடாது.

9. தேவதை முதலில் இந்த மாதிரி வரம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அனைவரும் உழைத்து தான் முன்னறே வேண்டும்..

10. இளையராஜாவும், ஏ ஆர் ரஹ்மானும் இசையமைக்க, அந்த பாடலை நான் பாட, அந்த பாடலுக்கு சூப்பர் ஸ்டார் ஆட வேண்டும்.

பொதுவாக இது போன்ற தொடர் பதிவுகளில் சங்கடமான விசயம் என்னவென்றால் அடுத்தவர்களை எழுத அழைப்பது. நாம் அழைத்து அவர்கள் மறுத்து விட்டாலோ இல்லை நாம் அழைத்ததை ஒரு சுமையாக அவர்கள் நினைத்தாலோ நமக்கு மிக வேதனையாக இருக்கும். அதனால் நான் யாரையும் அழைக்கப் போவதில்லை.
விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.

2 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

தொடர்பதிவில் ஒரு வசதி உண்டு ஐயா, நமக்கு கற்பனை வறட்சி ஏற்படும்ப்பொது இன்னொருவரின் கற்பனையில் நமது கற்பனையை கலந்து ஒரு பதிவு போட்டுக் கொள்ளலாம். அதனால் பெரும்பாலும் யாரும் அதை சுமையாக கருதமாட்டார்கள். விருதுகள் வழங்கும்போது கொஞ்சம் சங்கடங்கள் உண்டு.

என். உலகநாதன் said...

வருகைக்கு நன்றி டாக்டர்.