Apr 2, 2009

காலாவதியான கேஸ் சிலிண்டரை கண்டுபிடிப்பது எப்படி?





காலாவதியான கேஸ் சிலிண்டர் உபயோகப்படுத்துவதற்கு பாதுகாப்பானது அல்ல. அது பல ஆக்ஸிடெண்ட்களுக்கு வழி வகுக்கும். அதனால், நாம் கேஸ் சிலிண்டரை வாங்கும்போது மிக கவனமாக சரி பார்த்து வாங்கவேண்டும்.


எப்படி சரிபார்ப்பது? இதோ அதற்கான சில வழிமுறைகள்:


சிலிண்டர் மேலே உள்ள மூன்று ப்ளேட் போன்ற ஒன்றில் காலாவதியாகும் நாள் ஆல்பா நம்பர்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். எப்படி என்றால் A or B or C or D அதனுடன் பின்னால் இரண்டு இலக்க எண்கள் வரும், உதாரணமாக, D06.


ஆல்பாபெட் நம்பர் ஆனது காலாண்டை குறிக்கும்:
1. A - மார்ச் (முதல் காலாண்டு)
2. B - ஜூன் (இரண்டாம் காலாண்டு)
3. C - செப்டம்பர் (மூன்றாம் காலாண்டு)
4. D - டிசம்பர் (நான்காம் காலாண்டு)


D- 06 - கடைசி இலக்கங்கள் வருடத்தை குறிக்கிறது. அதாவது மேலே உள்ள படத்தில் தோன்றும் D- 06 என்பது 2006 ஆம் ஆண்டு டிசம்பர் காலாண்டை குறிக்கிறது. ஒரு உதாரண்த்திற்கு மேலே உள்ள சிலிண்டரை இன்றைக்கு சிலிண்டர் ஏஜண்ட் கொடுத்தால், அதை நாம் வாங்அ கூடாது. அதனை உபயோகித்தால், கேஸ் லீக்காகி, மிகப்பெரிய ஆக்ஸிடண்ட்களுக்கு வழி வகுக்கும்.


இரண்டாவது உதாரணம் D- 13, இந்த சிலிண்டரை நாம் 2013 டிசம்பர் வரை பயன்படுத்தலாம்.
நிறைய பேருக்கு இது ஏற்கனேவே தெரிந்த விஷயமாக இருக்கலாம். நான் இங்கே பதிவதற்கு காரணம் இதுவரை தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளட்டுமே என்ற நல்ல எண்ணத்தில்.




2 comments:

இனியவன் said...

tamilnenjam commented on your story 'காலாவதியான கேஸ் சிலிண்டரை கண்டுபிடிப்பது எப்படி?'

'நல்ல பதிவு. அருமையான கட்டுரை - பட விளக்கத்துடன். இதுக்கு வோட் போடனும்னு தோணிச்சு. விகடன்ல பார்த்து தேடிப்பிடிச்சு இங்கே வந்தேன்.

உங்க பதிவில் மறுமொழியிட முயற்சித்தேன். ஆனால் இயலவில்லை. நன்றி. இங்கே சொல்லிட்டடேன்.'

விக்னேஷ்வரி said...

நல்ல உபயோகமான பதிவு. தகவலுக்கு நன்றி இனியவன்.